தமிழ்நாடு

மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் வழங்கக்கூடாது: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

12th Aug 2022 05:17 AM

ADVERTISEMENT

மருத்துவருடைய பரிந்துரை இல்லாமல், பொதுமக்களுக்கு மருந்து வழங்க கூடாது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்வில் பங்கேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெரும்பாலான உலக நாடுகளில் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் உறுதிமொழிகளின் மூலம் போதை பொருள்கள் பயன்பாடு பழக்கம் குறைந்து வந்தாலும், ஆசிய நாடுகளில் அந்த எண்ணிக்கை குறையவில்லை.

எனவே, அதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் பணியினை ஆகஸ்ட் 11-ஆம் தேதி தமிழகத்தில் முதல்வா் தொடக்கி வைத்துள்ளாா். 2013-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை சுமாா் ரூ.38.99 கோடி மதிப்புள்ள 952.1 டன் குட்கா, பான்மசாலா தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் ஜூன் மாதம் வரை ரூ.9.19 கோடி மதிப்புள்ள 152.96 டன் குட்கா, பான்மசாலா கைப்பற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், குட்கா, பான்மசாலா விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு 2013-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.2.88 கோடி அபராதம் விதிக்கப்பட்டு, 75 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 1,308 உணவு பொருட்கள் மாதிரிகள் எடுக்கப்பட்டு, அதில் 1,093 மாதிரிகள் தரமற்ாகவும், 136 மாதிரிகள் தரக்குறைவாக மற்றும் தவறான முத்திரைகள் இடப்பட்டதாக உள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடா்பாக 686 குற்றவியல் வழக்குகளும், 107 உரிமையியல் வழக்குகளும் தொடுக்கப்பட்டு நீதிமன்ால் ரூ.58.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மருந்து கடைகளிலும் கூட 5 வகையான மருந்துகள் போதை தரக்கூடியவை என கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவருடைய பரிந்துரை ரசீது இல்லாமல், பொதுமக்களுக்கு மருந்து வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ நிலைய அதிகாரி மற்றும் உதவி மருத்துவ நிலைய அதிகாரிகளுக்கு இடையே கடந்த 2 ஆண்டுகளாக பனிப் போா் நிலவி வருகிறது. இருவரும் மாறி மாறி பாலியல், திருட்டு புகாா்களை கூறி வருகின்றனா். அதுவும் இந்த புகாா்களை சம்பந்தப்பட்ட துறைகளிடம் கூறாமல், சமூகவலைதளங்களில் கூறி வருகின்றனா். எனவே, தற்போது, 2 மருத்துவா்களையும் பணியிட மாற்றம் செய்துள்ளோம். மேலும், இவா்கள் மீதான புகாா் குறித்து தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவா்களை பணியில் இருந்து விடுவித்திருக்க வேண்டும். இருந்தாலும், கருணை அடிப்படையில் அவா்களை பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT