தமிழ்நாடு

தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்து கட்டணம் 3 மடங்கு உயர்வு

12th Aug 2022 01:53 PM

ADVERTISEMENT

சென்னை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் பயணக்கட்டணம் 3 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை-திருச்சிக்கு ரூ.2400, சென்னை-கோவைக்கு ரூ.3000 வரை ஆம்னி பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

வாரவிடுமுறை, சுதந்திர தினத்தையொட்டி விடுமுறை நாள்கள் வருவதால் ஏராளமான பயணிகள் சொந்த ஊர் பயணம் செல்வதால் பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளது. மதுரை மற்றும் நெல்லைக்கு வழக்கமாக ரூ.1400 வரை இருந்த கட்டணம் தற்போது ரூ.3500 வரை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இணையதளம் ஒன்றில் ஓசூரில் இருந்து கோவில்பட்டிக்கு ரூ.4000  வரை பயணச்சீட்டு விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் புகார் அளித்துள்ளனர். ஆகஸ்ட் 13,14,15 என தொடர் விடுமுறையொட்டி மக்கள் வெளியூர் செல்வதால் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: குழந்தை பிறப்பின்மையும் ஜோதிடம் தரும் முன்னெச்சரிக்கையும்!

தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT