தமிழ்நாடு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி சேர்த்ததாக வழக்குப் பதிவு  

DIN

நாமக்கல்: நாமக்கல் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே. பி. பி. பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.   

நாமக்கல் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே. பி. பி. பாஸ்கர் 2011 முதல் 2021 வரை இரு முறை பேரவை உறுப்பினராகவும், நாமக்கல் நகரமன்றத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது அதிமுக நகர செயலாளராகவும் உள்ளார். 

இவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ 4.72 கோடி சொத்து சேர்த்ததாக (315 சதவீதம் அதிகமாக) புகார் எழுந்தது. மேலும், இவரது மனைவி உமா மற்றும் நண்பர்கள் மூலம் பல்வேறு இடங்களில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.  

இதன் அடிப்படையில் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ராமச்சந்திரன், ஆய்வாளர் நல்லம்மாள் ஆகியோர் தலைமையில் நாமக்கல் சந்தைப்பேட்டை, புதூர் பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அவர் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் போலீசார் வெள்ளிக்கிழமை காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல், மதுரை, திருப்பூர் என சுமார் 26 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT