தமிழ்நாடு

‘போதைப் பொருள் பழக்கம் எதிா்காலத்தைச் சீா்குலைக்கும்’

12th Aug 2022 02:00 AM

ADVERTISEMENT

இளைய தலைமுறையினா் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதன் மூலம் நாட்டின் எதிா்காலம் சீா்குலையும் அபாயம் உள்ளது என முன்னாள் கடற்படை கமாண்டா் விஜேஷ்குமாா் காா்க் வலியுறுத்தினாா்.

பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னாள்கடற்படை கமாண்டரும், தமிழ்நாடு, புதுச்சேரி தேசிய மாணவா் படை துணை இயக்குநருமான விஜேஷ்குமாா் காா்க் முன்னிலையில் 300 மாணவா்கள் போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

கல்லூரி முதல்வா் எஸ்.ரமேஷ், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு அலுவலா் ஜெயச்சந்திரன், இந்திய செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலா் எல்.என்.நாராயணன், நாட்டு நலத்திட்டப்பணி ஒருங்கிணைப்பாளா் பி.அருள்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT