தமிழ்நாடு

விண்ணுலகை மண்ணுலகத்திற்கு கொண்டு வந்த வண்டி வேடிக்கை... கடவுள் வேடத்தில் மக்களுக்கு ஆசி வழங்கிய பக்தர்கள்!

DIN

சேலம்: சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆடித்திருவிழாவின் வண்டி வேடிக்கை விண்ணுலகமே மண்ணுலகுக்கு வந்து பக்தர்களுக்கு அருளாசி தருவது போன்ற மிகவும் வித்தியாசமான நிகழ்வுகள் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.

சேலத்தில் ஆண்டுக்கு ஒரு முறை 22 நாள்கள் நடக்கும் ஆடித்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோட்டை மாரியம்மன் திருக்கோயிலை மையமாக வைத்து அதனைச் சுற்றியுள்ள 18 பட்டி கிராமத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் ஆடித்திருவிழா களைக்கட்டத் தொடங்கும்

திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வருவார். இந்த விழாவில் உருளு தண்டம் தீமிதி விழா மற்றும் வண்டி வேடிக்கை பிரசித்தி பெற்றதாக உள்ளது. அந்த வகையில் சேலம் குகை மாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோயில் ஆடி திருவிழாவையொட்டி வண்டி வேடிக்கை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது

தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவில் ஆண்டுக்கு ஒரு முறை இந்த வண்டி வேடிக்கை நடைபெறும் வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போதைய விழா கலைகட்டத் தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது

இதற்காக 15 நாள்களுக்கு மேலாக கடுமையாக விரதம் மேற்கொண்ட பக்தர்கள் கடவுள் உருவத்தில் வேடம் தரித்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது முக்கிய நிகழ்வாக அமையும். 

அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை குகைப் பகுதியில் இருந்து புராண நிகழ்வுகளை உணர்த்தும் வகையில் கடவுள்கள் போல வேடம் தரித்து மின்விளக்குகளால் ஜொலிக்கும் அலங்கார வண்டிகளில் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் கடவுள் உருவம் தறித்த வேடத்தில் ஊர்வலமாக வந்தனர்.

இதனைக் காண சேலம் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

கண்ணை கவரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் கடவுள் வேடம் தரித்தவர்கள் மக்கள் கூட்டத்தில் வலம் வந்து அவர்களைப் பார்த்து கையை அசைத்து ஆசி வழங்கினர். 

பெண் தெய்வங்களின் உருவங்களையும் ஆண்களே தத்துருபமாக தரித்து வந்து மக்களுக்கு ஆசி.

20-க்கும் மேற்பட்ட வண்டிகளில் ஒவ்வொரு வாகனங்களிலும் ஒவ்வொரு புராண நிகழ்வுகளை உணர்த்தும் வகையில் ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளில் வரும் பாத்திரங்கள் தத்துருபமாக காட்சிப்படுத்தப்பட்டு பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.

இந்த வண்டி வேடிக்கையில் சிறப்பு அம்சமாக பெண் தெய்வங்களின் உருவங்களையும் ஆண்களே தத்துருபமாக தரித்து வருவது கூடுதல் சிறப்பு. 

குகைப் பகுதியில் இருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பக்தர்களுக்கு  ஆசி வழங்கியபடி வந்து மாரியம்மன் கோயிலை சுற்றி வலம் வந்த பிறகு இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற வண்டி வேடிக்கை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு ரசித்தனர்.

விண்ணுலகமே மண்ணுலகுக்கு வந்து பக்தர்களுக்கு அருளாசி தருவது போன்ற மிகவும் வித்தியாசமான நிகழ்வுகளை இந்த வண்டி வேடிக்கை அனைவருக்கும் உணர்த்தியது என்றால் அது மிகையல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT