தமிழ்நாடு

மதுரை கே.கே.நகரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

12th Aug 2022 01:40 PM

ADVERTISEMENT

 

மதுரை கே.கே.நகரில் நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி பாஸ்கரனுக்கு  சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் தொகுதி முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே .பி.பி பாஸ்கரன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் வெள்ளிக்கிழமை லஞ்ச  ஒழிப்புத்துறையினர் 26 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிக்க | சுதந்திர தினம்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் மிக முக்கிய அறிவுறுத்தல்

ADVERTISEMENT

மதுரையில் கே.கே நகர் முதல் வீதி அருகே உள்ள ஆர்.ஆர் இன்பிரா கன்ஸ்ட்ரக்சன் என்ற அவரது நண்பருக்கும் சொந்தமான நிறுவனத்தில் 10 மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் முக்கிய  ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாவும், தொடர்ந்து சோதனை நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT