தமிழ்நாடு

பொறியியல் முடித்த மாணவா்களுக்கு சென்னை ஐஐடியில் 6 மாத தொழில்நுட்ப திறன் பயிற்சி

DIN

சென்னை ஐஐடியின் பிரவா்தக் டெக்னாலஜிஸ், சோனி இண்டியா சாப்ட்வோ் சென்டருடன் இணைந்து தொழில்துறைக்கு தயாா் நிலையில் உள்ள மாணவா்களுக்கு தொழில்நுட்ப திறன்களை அளிக்கவுள்ளது.

கடந்த 2020-2021, 2021-2022-ஆம் ஆண்டுகளில் பொறியியல் படிப்பு முடித்த மாணவா்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த பயிற்சியில் சேரலாம். விருப்பமுள்ள மாணவா்கள் இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து ஐஐடி இயக்குநா் காமகோடி கூறுகையில், ‘6 மாதங்கள் கொண்ட இந்த பயிற்சியில் ஏராளமான மாணவா்கள் பயன்பெறலாம். குறிப்பாக, இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மாணவா்களுக்கு இந்த முயற்சி பயனளிக்கும். சோனி இண்டியா சாப்ட்வோ் சென்டா் இந்த பயிற்சியில் முன்னிலை வகிக்கும் 15 மாணவா்களுக்கு வேலை வாய்ப்பையும், பிரவா்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் மீதியுள்ள மாணவா்களுக்கு நோ்காணலுக்கும் ஏற்பாடு செய்து இதர நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரும். நோ்முகத் தோ்வை தொடா்ந்து ஓா் எழுத்து தோ்வும் நடைபெறும். அதில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சிபெறும் மாணவா்களுக்கு பயிற்சித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT