தமிழ்நாடு

மக்கள் நலப் பணியாளர்கள் 2 வாரத்தில் பணியில் சேர உத்தரவு

11th Aug 2022 03:26 PM

ADVERTISEMENT

புது தில்லி: பணியில் சேராத மக்கள் நலப் பணியாளர்கள் 2 வாரத்துக்குள் பணியில் சேர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்கள் நலப் பணியாளர் பணியில் மீதமுள்ள 4% பேர் சேர 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பணியில் சேறுவதற்கான இறுதிக்கெடுவை மேலும் 2 வாரம் நீட்டிப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி அஜய் ரஸ்தோகியின் உத்தரவிற்கு தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்க தலைவர் வரவேற்றுள்ளார்.

மக்கள் நலப் பணியாளர்கள் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி விசாரனைக்கு வந்தது. அப்போது, மக்கள் நலப் பணியாளர்கள் விவகாரத்தில் தற்போது புதிய முன்மொழிவு திட்டத்தை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தியுள்ள நிலையில், ஆட்சி மாறும் போது மீண்டும் பணியில் இருந்து நீக்கப்படாமல் இருக்கும் வகையில், ஏதாவது கொள்கையளவில் சட்ட அனுமதி தர அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா என்பதைத் தெரிவிக்குமாறு தமிழக அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் வி.கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11-ஆம் தேதி மதியம் 2 மணிக்குத் ஒத்திவைத்தனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: அமீர் கானின் புதிய படத்தைப் பாராட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்

இந்நிலையில், பணியில் சேறுவதற்கான இறுதிக்கெடுவை மேலும் 2 வாரம் நீட்டிப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT