தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளைமுதல் கலைநிகழ்ச்சிகள்

11th Aug 2022 02:26 PM

ADVERTISEMENT

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளைமுதல் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அரசுத் தரப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வீடுகளில் கொடி, சமூக வலைதளங்களின் முகப்புப் படமாக தேசியக் கொடி எனப் பல்வேறு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

நாட்டின் சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை கொண்டாடிடும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையத்துடன் இணைந்து மதுரை கலைமாமணி தி.சோமசுந்தரம் குழுவினரின் பல்வேறு கிராமியக் கலை நிகழ்ச்சிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | விரைவில் சென்னை - மும்பை ரயில் பயண நேரம் குறைகிறது

இதில், சிலம்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், காளையாட்டம் போன்ற கிராமிய நிகழ்ச்சிகள் மாலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை நடத்தப்படவுள்ளது.

ஆகஸ்ட் 12 - சென்னை சென்ட்ரல் மெட்ரோ
ஆகஸ்ட் 13 - விம்கோ நகர் மெட்ரோ
ஆகஸ்ட் 14 - கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்
ஆகஸ்ட் 15 - அசோக் நகர்

ADVERTISEMENT
ADVERTISEMENT