தமிழ்நாடு

விடுதலை கோரி உச்ச நீதிமன்றத்தில் நளினி மனு

11th Aug 2022 05:01 PM

ADVERTISEMENT

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ள்ளார்.

இடைக்காலமாக ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் தனது மனுவில் நளினி கோரிக்கை விடுத்துள்ளார். பேரறிவாளன் விடுதலை வழக்கில் தீர்ப்பில் உள்ள அம்சங்களை சுட்டிக்காட்டி நளினி மனு தாக்கல் செய்துள்ள்ளார்.

இதையும் படிக்க: 35 ஆண்டுகளுக்கு பிறகு கமலுடன் இந்தியன் 2வில் இணையும் நடிகர்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர்களில் ஒருவரான நளினி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூா் பெண்கள் தனிச்சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறாா். அவரது கணவர் ஆண்கள் சிறையில் உள்ளார்.

ADVERTISEMENT

நளினியின் தாயாா் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை கவனித்துக் கொள்ள பரோல் வழங்குமாறு தமிழக அரசிடம் வா் கோரிக்கை விடுத்ததையடுத்து, கடந்த டிசம்பரில் ஒரு மாத காலம் பரோல் வழங்கப்பட்டது.

தொடா்ந்து 6 முறை பரோல் நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 7-ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீடித்து அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT