தமிழ்நாடு

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார விழா

11th Aug 2022 03:03 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 165வது அவதார விழா அவரது கருப்பனேந்தல் மடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

இதையொட்டி புனித நீர் கலசங்கள் வைத்து மாயாண்டி சுவாமிகள் சன்னதி முன்பு சிறப்பு யாக வேள்வி நடத்தப்பட்டது. குலால சமுதாய சிவாச்சாரியார்கள் யாகத்தை நடத்தினர்.

பூர்ணாஹூதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும் கலச நீராலும் அபிஷேகப் பொருள்களும் மாயாண்டி சுவாமிகளுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. 

ADVERTISEMENT

திரளான மக்கள் அவதார விழாவில் பங்கேற்று மாயாண்டி சுவாமிகளை தரிசனம் செய்தனர். மேலும் கருப்பனைந்தல் மடத்தில் மாயாண்டி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மகா கணபதி, முருகன் சன்னதிகளிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT