தமிழ்நாடு

எடப்பாடி ஸ்ரீ மேட்டுமாரியம்மன் கோயில் பண்டிகை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூ மிதித்து நேர்த்திகடன்

11th Aug 2022 11:56 AM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டம் எடப்பாடி ஸ்ரீ மேட்டுமாரியம்மன் கோவில் பண்டிகையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த மேட்டுத்தெரு பகுதியில் ஸ்ரீ மேட்டு மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் பண்டிகை நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மேட்டுமாரியம்மன் பண்டிகை ஆடி மாதம் முதல் வாரத்தில் பூச்சாட்டுதல்களுடன் தொடங்கி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். 

பண்டிகை நாளான வியாழக்கிழமை அதிகாலையில் எழுந்து பக்தர்கள் புனித நீராடி சுவாமிக்கு அலங்காரம் செய்து, அழகுகுத்தி பூங்கரகம் எடுத்து வந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | சக்தி மசாலா சார்பில் பேடியா ஹால்: கட்டட நிதியாக ரூ.25 லட்சம் நன்கொடை

பின்னர் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து கிடாவெட்டி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மேட்டுமாரியம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றது. 

பண்டிகைக்கு முதல் நாள் 2000 பேருக்கு ஐந்து வகையான அன்னதானம் வழங்கப்பட்டது. 

பூ மிதிக்கும் இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சிறிது நேரம் கூட்ட நெரிசில்  ஏற்பட்டது. அப்போது எடப்பாடி காவல்துறையினர் 20க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலை சரி செய்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT