தமிழ்நாடு

காவலர்களுக்கு பிரியாணி விருந்தளித்த டிஜிபி சைலேந்திரபாபு 

11th Aug 2022 11:07 AM

ADVERTISEMENT

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களின் பணியைப் பாராட்டி அவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்து வைத்தார்.

44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. 162 நாடுகளிலிருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த விளையாட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. 

இதையும் படிக்க | ட்விட்டரில் தேசியக் கொடியை பறக்கவிட்ட ரஜினிகாந்த்!

மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வந்தனர். இந்த விளையாட்டுப் போட்டியின் பாதுகாப்புப் பணிக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் பணியில் ஈடுபட்ட காவலர்களின் பணியை பாராட்டும் விதமாக அவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்து அளித்துள்ளார். 

இதையும் படிக்க | ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

மேலும் காவலர்களுடன் அமர்ந்து அவரும் உணவருந்திய விடியோ வெளியாகியாகியுள்ளது. 

செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு 3 நாள்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT