தமிழ்நாடு

'அரசின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளிலும் நீதிமன்றம் தலையிட முடியாது'

11th Aug 2022 03:56 PM

ADVERTISEMENT

மதுரை: நீதிமன்றம் அரசின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளிலும் தலையிட முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

பொதுநல வழக்குகள் என்ற பெயரில் நீதிமன்றத்தின் நேரத்தையும், மாண்பையும் குறைக்க வேண்டாம் எனவும்  நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கல்குவாரிக்கு அனுமதி வழங்குவது, ஆக்கிரமிப்பு அகற்றம் போன்ற பொதுநல வழக்குகள் இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நிர்வாக நீதிபதி பி.என். பிரகாஷ் மற்றும் நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது நீதிபதிகள்,  சாலை அமைப்பது, கழிவறை கட்ட உத்தரவிடுவது போன்றவற்றை எல்லாம் பொதுநல வழக்காக பதிவிட வேண்டாம். அது நீதிமன்றத்தின் பணி இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: மக்கள் நலப் பணியாளர்கள் 2 வாரத்தில் பணியில் சேர உத்தரவு

மேலும், நீதிமன்றம் அரசின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளிலும் தலையிட முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT