தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டியில் பள்ளிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

11th Aug 2022 12:22 PM

ADVERTISEMENT

 

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி தமிழக கல்வித்துறை உத்தரவின் பேரில் ஏற்கப்பட்டது.

தமிழக அரசின் கல்வித் துறை ஆகஸ்ட் 12- 19 ஆம் தேதி வரை பள்ளிகளில் போதைப் பொருள் விழிப்புணர்வு வாரம் கொண்டாட அறிவுறுத்தியது.

ADVERTISEMENT

போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி முன்மொழியும் பள்ளி மாணவர்கள்.

இதன்படி, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

போதைப் பொருள் ஒழிப்பு குறித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உரை அடங்கிய படக்காட்சி ஒளிபரப்பப்பட்டது.

நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் ஐயப்பன் வரவேற்றார். வட்டாட்சியர் கண்ணன், கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம், கிராம நிர்வாக அலுவலர் ஜோதிபிரகாஷ் முன்னிலை வகித்தார்.

இதையும் படிக்க | எடப்பாடி ஸ்ரீ மேட்டுமாரியம்மன் கோயில் பண்டிகை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூ மிதித்து நேர்த்திகடன்

நிகழ்வில் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி முன்மொழிய அதை பள்ளி மாணவர்கள் 2000 பேரும் ஏற்றனர்.

அவ்வாறே ஆரம்பாக்கம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் பாதிரியார் கிரீத் மேத்யூஸ் தலைமையிலும் ஆரம்பாக்கம் ஊராட்சி துணை தலைவர் சிலம்பரன் முன்னிலையிலும் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது.

ஆரம்பாக்கம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்வு.

நிகழ்வில் ஆரம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யனாரப்பன் பங்கேற்று மாணவர்களிடம் போதைப் பொருளின் தீய விளைவுகள் குறித்து எடுத்துரைத்தார்.

பின்னர் மாணவர்கள் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதி மொழியேற்றனர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு குறித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உரை அடங்கிய படக்காட்சி ஒளிபரப்பப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT