தமிழ்நாடு

மானாமதுரை அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் பலி 

11th Aug 2022 09:11 AM

ADVERTISEMENT


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே புதன்கிழமை இரவு இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பலியாகினர். மற்றொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மானாமதுரை அருகே கால் பிரிவு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவலிங்கம் (45), மலையாண்டி (55) இருவரும் பைக்கில் அருகே மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் கிருங்காங்கோட்டை என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்று கொண்டு இருந்தனர். சிவலிங்கம் பைக்கை ஓட்டி வந்தார். அப்போது மதுரையில் இருந்து பரமக்குடி அருகே பொன்னையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த  நல்லான் என்பவர் பைக்கில் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். கிருங்கான்கோட்டை பகுதியில் இந்த இரண்டு பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 

இதையும் படிக்க | திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லாரி-லாரி நேருக்கு நேர் மோதி தீ விபத்து: உடல் கருகி 2 பேர் பலி

இந்த விபத்தில் நல்லான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சிவலிங்கம், பைக்கின் பின்னால் உட்கார்ந்து வந்த மலையாண்டி இரண்டு பேரும் பலத்த காயங்களுடன் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், வழியிலேயே சிவலிங்கம் இறந்தார். மலையான்டி சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

இந்த விபத்து சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT