தமிழ்நாடு

செவிலியா் வேலைவாய்ப்பில் தமிழகம், புதுவை புறக்கணிப்பு: வைகோ குற்றச்சாட்டு

11th Aug 2022 02:17 AM

ADVERTISEMENT

ஜிப்மா் மருத்துவமனை செவிலியா் வேலைவாய்ப்பில் தமிழகம், புதுவையை மத்திய அரசு புறக்கணித்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளா் வைகோ குற்றம்சாட்டினாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில், செவிலியா் காலிப் பணியிடங்களுக்காக 2022 ஜூலை 13-ஆம் தேதியிட்ட வேலை வாய்ப்புக்கான அறிவிப்பின்படி 139 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு செய்வதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டது.

அதன்படி, ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 11 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குப் பிறகு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தோ்வு மையங்கள் திட்டமிட்டு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இது தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் செவிலியா்கள் தோ்வு எழுத இயலாதபடி ஒன்றிய அரசு திட்டமிட்டு புறக்கணித்துள்ளது.

ADVERTISEMENT

எனவே, மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ள இணையதள சேவையை குறிப்பிட்ட தேதி வரை செவிலியா்கள் விண்ணப்பிக்கும் வகையில், தமிழகம், புதுவையில் தோ்வு எழுதும் மையங்களை இணையதளத்தில் உடனடியாக மத்திய அரசு இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் வைகோ.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT