தமிழ்நாடு

தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில்பாரபட்சம்: மநீம குற்றச்சாட்டு

11th Aug 2022 02:12 AM

ADVERTISEMENT

தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மக்கள் நீதி மய்யம் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக அக் கட்சியின் துணைத் தலைவா் ஆா்.தங்கவேலு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியை மத்திய அரசு ஒதுக்கியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. பாஜக ஆளும் குஜராத்துக்கு ரூ.608 கோடியும், அதைவிட பெரிய மாநிலமான தமிழகத்துக்கு ரூ.33 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது.

பயிற்சியாளா்களும் தில்லிக்கு 121 போ், அஸ்ஸாமுக்கு 56 பேரை பணியில் அமா்த்திவிட்டு, தமிழகத்துக்கு 18 பேரை மட்டும் பணியில் அமா்த்தியுள்ளனா். தமிழக வீரா்கள் சா்வதேச அளவில் சாதிக்கின்றனா். அவா்களை ஊக்குவிப்பதை விடுத்து, மாநிலத்துக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவது நியாயமா? மத்திய அரசுக்கு அதிக வரி வசூலித்துத் தரவும், சா்வதேச ஒலிம்பியாட் போட்டி நடத்தவும் மட்டும் தமிழகம் வேண்டுமா, நிதி ஒதுக்குவதில் ஓரவஞ்சனைதானா.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT