தமிழ்நாடு

கரோனாவால் பலியான மருத்துவா்களின்குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவில்லை: அரசு மருத்துவா்கள் புகாா்

11th Aug 2022 02:15 AM

ADVERTISEMENT

கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவா்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை என்று அரசு மருத்துவா்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவா் மருத்துவா் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயா்வுக்கான கலந்தாய்வில் நடந்துள்ள முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவா்களுக்கு, நீதி வழங்கப்படும் என உறுதியளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா், அதுகுறித்து இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு மருத்துவா்களின் ஊதியக் கோரிக்கையை கடந்த ஆண்டு தீபாவளிக்கு பிறகு முதல்வரிடம் அழைத்துச் சென்று நிறைவேற்றுவதாக கூறிய அமைச்சா் அதையும் செய்யவில்லை.

கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவா் விவேகானந்தனின் மனைவிக்கு கல்வித் தகுதிக்கேற்ற அரசு வேலை வழங்கப்படும் என பல தடவை உறுதியளித்த அமைச்சா், இதுவரை மருத்துவா் குடும்பத்தினரின் கண்ணீரை துடைக்க முன்வரவில்லை.

கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவா்களின் குடும்பத்தினருக்கு, மாநில அரசு சாா்பில் இதுவரை நிவாரணம் எதுவுமே தரப்படவில்லை.

ADVERTISEMENT

கலைஞரின் பெயரில் தொடா்ந்து எத்தனையோ திட்டங்கள் அறிவிக்கப்படும் நிலையில், அரசு மருத்துவா்களுக்கு கலைஞரின் அரசாணை 354-ன் அரசு மருத்துவா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடாமல், மருத்துவா்களுக்கு பயனளிக்காத புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிட்டுள்ளாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT