தமிழ்நாடு

அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி ஏன்? நீதிபதி

10th Aug 2022 04:51 PM

ADVERTISEMENT


அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கியது ஏன் என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து தொடர்ந்த வழக்கு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, இருதரப்பு வழக்குரைஞர்களும் வாதாடினர். இதில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், கட்சி விதிப்படி பொதுக்குழுவுக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கியபோதும் தேர்வு முறையில் மாற்றமில்லை எனத் தெரிவித்தார். 

படிக்க | சுவாமிமலை ஸ்தபதி வீட்டிலிருந்த பல கோடி மதிப்புள்ள சிலைகளின் விவரம்

ADVERTISEMENT

மேலும், பொதுக்குழுவுக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் அழைப்பு விடுத்ததில் தவறில்லை எனவும் வாதிடப்பட்டது. 

இதனைக் கேட்டநீதிபதி, பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து விளக்கம் தர வேண்டும் என அறிவுறுத்தினார். 

மேலும், அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கியது ஏன் என்பது குறித்தும் விளக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

தமிழ் மகன் உசேன் கட்சி விதிகளின்படி நிரந்தர அவைத்தரலைவராக நியமிக்கப்பட்டாரா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT