தமிழ்நாடு

புதுச்சேரி சட்டப்பேரவை: பட்ஜெட் கூட்டம் தொடங்கியதும் திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

10th Aug 2022 12:09 PM

ADVERTISEMENT

 

புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதன்கிழமை காலை 9.40 மணிக்கு உரையை வாசிக்கத் தொடங்கியதும் திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பேரவை உறுப்பினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமை காலை 9.30-க்கு தொடங்கியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடக்க உரையாற்றினார். சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையை வாசிக்கத் தொடங்கியதும் தொடங்கியதும் திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பேரவை உறுப்பினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | புதுவை சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைப்பு

புதுச்சேரியில் மின்துறை தனியார்மயம், தேதிய ஜனநாயக கூட்டணி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பட்ஜெட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை போன்ற காரணமாக வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தனர். 

முன்னதாக, சட்டப்பேரவை வந்தடைந்த துணைநிலை ஆளுநருக்கு, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. சட்டப்பேரவைத் தலைவர் துணைநிலை ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT