தமிழ்நாடு

திமுக நிா்வாகி கொலை முயற்சி வழக்கு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

10th Aug 2022 01:51 PM

ADVERTISEMENT

 


திமுக நிா்வாகி கொலை முயற்சி மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட மூன்று வழக்குகளின் விசாரணைக்காக அமைச்சர் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரானார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த 2011 ஆம் ஆண்டு திமுகவினர் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டனர்.

அப்போது, திமுக எம்எல்ஏவாக இருந்த அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கும் மற்றொரு கோஷ்டியை சேர்ந்த ஆறுமுகநேரி நகர திமுக செயலர் சுரேஷ் என்பவருக்கும் தேர்தல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பாததற்கு ஆய்வுகள் கூறும் காரணம் என்ன?

இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மற்றும் மே மாதம் 21 மற்றும் 29 ஆகிய தேதிகளில் கொலை முயற்சி தாக்குதல் பெட்ரோல் குண்டு வீசுதல் போன்ற  சம்பவங்கள் நடைபெற்றது.

இது சம்பந்தமாக மூன்று பிரிவுகளில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு  தற்போது பாஜக கட்சியில் இணைந்துள்ள கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் அனிதாகிருஷ்ணன்  உள்பட சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு விசாரணைக்காக புதன்கிழமை நேரில் ஆஜராகினர். அப்போது மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி இந்த வழக்கை வரும் 30 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT