தமிழ்நாடு

நிதீஷ், தேஜஸ்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

10th Aug 2022 05:08 PM

ADVERTISEMENT

 

பிகார் மாநில முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள முதல்வர் நிதீஷ் குமாருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது, பிகார் மாநில முதல்வராக பதவியேற்றுள்ள நிதீஷ் குமாருக்கும், துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளா எனது சகோதரர் தேஜஸ்வி யாதவிற்கும் இதயம் நிறைந்த வாழ்த்துகள்.  

நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை காக்கும் வகையில், உரிய நேரத்தில் பிகாரில் மீண்டும் மகா கூட்டணி அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

படிக்கபிகார் முதல்வராக நிதீஷ் குமார்; துணை முதல்வராக தேஜஸ்வி பதவியேற்பு

 

பிகாரின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவா் நிதீஷ் குமாரும், துணை முதல்வராக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவும் இன்று (ஆக.10) பதவியேற்றுக் கொண்டனர்.

கருத்து வேறுபாடு காரணமாக பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் மகா கூட்டணியில், நிதீஷ் குமார் இணைந்துள்ளார். மகா கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT