தமிழ்நாடு

போதைப் பொருள் தடுப்பு: முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

10th Aug 2022 08:24 AM

ADVERTISEMENT

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகம் முழுவதும் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர். இருப்பினும், போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதையும் படிக்க | மோடியிடம் சொந்த கார் இல்லை: சொத்து மதிப்பு ரூ.2.23 கோடி

இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது, போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.

ADVERTISEMENT

சென்னை கலைவாணார் அரங்கில் நடைபெறும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT