தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று விசாரணை

10th Aug 2022 08:03 AM

ADVERTISEMENT

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து தொடா்ந்த வழக்கை உயா்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து வந்தாா். இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரியிடம் மனு அளிக்கப்பட்டது. 

இதையும் படிக்கமோடியிடம் சொந்த கார் இல்லை: சொத்து மதிப்பு ரூ.2.23 கோடி

இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரணையில் இருந்து விலகினாா். அதைத் தொடா்ந்து வழக்கை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனை தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி நியமித்தாா். இந்த நிலையில், அதிமுகவின் பொதுக் குழு தொடா்பான வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. 

ADVERTISEMENT

அப்போது மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராக உள்ளதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், வழக்கின் விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT