தமிழ்நாடு

பிளவுகளை கடந்து அதிமுக ஒன்றிணைந்த ஆட்சி உருவாகும்: வீ.கே.சசிகலா பேட்டி

10th Aug 2022 02:05 PM

ADVERTISEMENT


பிளவுகளை கடந்து நிச்சயம் அதிமுக ஒன்றிணைந்து, ஜெயலலிதா ஆட்சி உருவாகும் என்று மதுரை விமானநிலையத்தில் வீ.கே.சசிகலா தெரிவித்தார். 

திண்டுக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த வீ.கே.சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

இதையும் படிக்க | ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பாததற்கு ஆய்வுகள் கூறும் காரணம் என்ன?

அப்போது, புரட்சித்தலைவர் அதிமுகவை தொடங்கிய சிறு காலத்திலயே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவர் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டு இரட்டை இலை மற்றும் சுயேட்சை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர். கழகத்தின் முதல் வெற்றிக்கு சொந்தகாரர். அவருடைய இழப்பு ஈடு செய்ய இயலாதது, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக செல்கிறேன்.

ADVERTISEMENT

தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பிளவுகளை கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும், அதிமுக வெற்றி வாகை சூடும், மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம் என்று சசிகலா கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT