தமிழ்நாடு

உதகையில் வனவிலங்கு தாக்கியதில் 4 வயது குழந்தை பலி

10th Aug 2022 06:15 PM

ADVERTISEMENT


உதகை: நீலகிரி மாவட்டம் உதகை வடக்கு வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் வனவிலங்க தாக்கியதில் 4 வயது குழந்தை பலியானது.

இன்று மதியம் சுமார் 12 மணியளவில் உதகை வடக்கு வனச்சரகம், தேனாடுகம்பை பிரிவு, ஒன்னதளை காவல் பகுதிக்கு உட்பட்ட அரக்காடு பகுதியில் உள்ள பாலன் என்பவரது தேயிலை தோட்டத்தில் குழந்தை ஒன்றை வனவிலங்கு தாக்கி இழுத்துச் சென்றதாக வனத்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

வனத்துறையினர் உடனடியாக பணியாளர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, நிஷாந்த் என்பவரது 4 வயது குழந்தை சரிதா, சுயநினைவின்றி கழுத்தில் இரத்த காயத்துடன் இருந்தது.

குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் குழந்தை மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். 

ADVERTISEMENT

பின்னர் சம்பவம் நடந்த இடத்தை வனத்துறையினர் ஆய்வு செய்ததில் அருகிலுள்ள சிறுத்தை (அ) புலியின் காலடி தடங்கள் இருந்ததால், அவைதான் குழந்தையை தாக்கி இருக்கலாம் என உறுதி செய்யப்பட்டது. 

மேலும் அந்த குழந்தை இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்கு செல்லும் போது இந்த சம்பவம் நடந்திருப்பதாக குழந்தையின் தாயார் கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT