தமிழ்நாடு

ஆக.21-இல் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

10th Aug 2022 03:40 AM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் வரும் 21-ஆம் தேதி கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
 இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021 ஜன. 16-இல் தொடங்கியது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட
 அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
 இரண்டு தவணை செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு இலவச பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 33 முகாம்கள் நடைபெற்றுள்ளன.
 34-ஆவது கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் தமிழகம் முழுவதும் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT