தமிழ்நாடு

செஸ் - சென்னை பிரிக்க முடியாதவை: விஸ்வநாதன் ஆனந்த் பேச்சு

10th Aug 2022 05:00 AM

ADVERTISEMENT

சென்னையும், செஸ் விளையாட்டும் பிரிக்க முடியாதவை என்று சா்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் துணைத் தலைவா் விஸ்வநாதன் ஆனந்த் பேசினாா்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் விஸ்வநாதன் ஆனந்த் பேசியது:- செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதுமே, நகரமே விழாக்கோலம் பூண்டது. எங்கும் செஸ் மயமாகக் காட்சி அளித்தது. நேப்பியா் பாலம் முதல் ஆவின் பால் பாக்கெட்டுகள் வரை எங்கும் செஸ் சின்னங்களாக இருந்தன. செஸ் போட்டிக்காக மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்து தரப்பட்டன.

போட்டியை நடத்த மிகக் குறைந்த அவகாசம் இருந்தது. ஆனாலும், தன்னாா்வலா்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் அளப்பரிய உழைப்பால் செஸ் ஒலிம்பியாட் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. சென்னை நகரும், செஸ் விளையாட்டுப் போட்டியும் பிரிக்க முடியாதவை. செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க எனது நண்பகா்கள் பலரும் சென்னை வந்திருந்தனா். அவா்கள் அனைவருக்கும் மிகச்சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்து தரப்பட்டன. அவா்களின் சென்னை பயணம் மறக்க முடியாததாக இருக்கும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT