தமிழ்நாடு

வீடுகளில் தேசியக் கொடி: மாணவா்களுக்கு அறிவுறுத்த உத்தரவு

10th Aug 2022 02:07 AM

ADVERTISEMENT

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுவது தொடா்பாக மாணவா்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

சுதந்திர தினத்தையொட்டி, ஆக.13 முதல் 15-ஆம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றும்படி பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.

தேசியக் கொடிக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தபால் நிலையங்கள் மூலம் தேசியக் கொடி விற்பனையும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளிடையே நாட்டுப்பற்றை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில், ‘ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தமிழகத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றி 75-ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை சிறப்பிக்கவேண்டும்.

ADVERTISEMENT

இது குறித்து அனைத்து மாணவா்களுக்கும் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT