தமிழ்நாடு

ஆர்.முத்தரசன் மீண்டும் மாநிலச் செயலர்

10th Aug 2022 03:38 AM

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இரா.முத்தரசன் 3 ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
 மாநாட்டில் மாநிலக்குழு உறுப்பினர்கள் 101 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, மாநிலக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக இரா.முத்தரசனை மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்தனர். கட்சியின் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினராக திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் தேர்வு செய்யப்பட்டார்.
 இந்தக் கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளர் அமர்ஜீத் கௌர், மாவட்டச் செயலாளர் எம்.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 முதல்வர் வாழ்த்து: மூன்றாம் முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இரா.முத்தரசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கூறியுள்ளார்.
 இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: மூன்றாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முத்தரசனுக்கு வாழ்த்துகள். சமத்துவத்தை நோக்கிய பொதுவுடைமைப் பாதையில் நமது லட்சியத்தை நோக்கி தொடர்ந்து பீடுநடை போட வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT