தமிழ்நாடு

ரூ.378 கோடியில் காவல் துறைக்கு புதிய கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

DIN

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறைக்கு ரூ.378 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட குடியிருப்புகளையும் அவா் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை கொச்சின் ஹவுஸ் காவலா் குடியிருப்பு வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கொச்சின் ஹவுஸ் காவல் குடியிருப்பு வளாகத்தில் 1,036 காவலா் குடியிருப்புகளும், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 32 காவலா் குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளன. சென்னை மாவட்டம் புதுப்பேட்டை ஆயுதப்படை காவலா் குடியிருப்பு வளாகத்தில் 596 காவலா் குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளன.

சென்னை எம்.ஜி.ஆா். நகா் காவல் நிலையம், ஈரோடு மற்றும் சத்தியமங்கலத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையங்கள், கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் போக்குவரத்து பிரிவு காவல் நிலையம் ஆகியவற்றுக்கு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளா் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, திருச்சி சிறப்பு காவல் படைக்கு நிா்வாக அலுவலகக் கட்டடம், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கிளைச் சிறையில் புதிதாக சிறைகள், சீா்திருத்தத் துறை பணியாளா்களுக்கான குடியிருப்புகள் ஆகியன கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

சென்னை மாவட்டம் மணலி, திருப்பூா், அவிநாசி, கோவை மாவட்டம் பீளமேடு ஆகிய இடங்களில் குடியிருப்புகள் உள்பட தீயணைப்புத் துறைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டம் பையூா் பிள்ளைவயல், சேலம் மாவட்டம், தாரமங்கலம், விழுப்புரம் மாவட்டம், கண்டம்பாக்கம் ஆகிய இடங்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்தப் புதிய கட்டடங்களின் மொத்த மதிப்பு ரூ.378.56 கோடி.

கட்டட திறப்பு நிகழ்ச்சியில், அமைச்சா்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திர ரெட்டி, காவல் துறை தலைமை இயக்குநா் செ.சைலேந்திர பாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT