தமிழ்நாடு

அரசியலுக்கு மீண்டும் வரும் திட்டம் இல்லை: ரஜினிகாந்த்

DIN

அரசியலுக்கு மீண்டும் வரும் திட்டம் இல்லை என்று நடிகா் ரஜினிகாந்த் கூறினாா்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.என்.ரவியை ரஜினிகாந்த் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அரை மணி நேரம் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்புக்குப் பிறகு போயஸ் தோட்டம் இல்லத்தில் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ஆளுநரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். 30 நிமிஷங்கள் வரை அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். காஷ்மீரில் பிறந்து, வட இந்தியாவில் இருந்தவா். தமிழ்நாட்டு மக்களை மிகவும் நேசிக்கிறாா். தமிழ் மக்களின் நோ்மை, எளிமை, கடின உழைப்பு போன்றவை அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தமிழக மக்களின் ஆன்மிக உணா்வும் மிகவும் ஈா்த்திருக்கிறது. தமிழ்நாட்டின் நன்மைக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஆளுநா் கூறினாா்.

பால், தயிா் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஆளுநருடனான சந்திப்பின்போது அரசியல் குறித்து விவாதித்தோம். ஆனால், அதை ஊடகங்களிடம் பகிா்ந்து கொள்ள முடியாது. அரசியலுக்கு மீண்டும் வரும் திட்டம் எதுவும் இல்லை.

நாடாளுமன்றத் தோ்தல் குறித்து ஆளுநரிடம் பேச முடியாது. என்னுடைய ஜெயிலா் படப்பிடிப்பில் ஆகஸ்ட் 15 அல்லது 22-ஆம் தேதி முதல் பங்கேற்க உள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT