தமிழ்நாடு

ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை

DIN

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ்ஸை நீக்கிய நிலையில், ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகின்றது.

இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று மாலை ஓபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனையில் பொதுக்குழு வழக்கு தொடர்பாகவும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஓபிஎஸ்ஸின் திட்டம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து தொடா்ந்த வழக்கை விசாரித்து வந்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியை மாற்ற வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரியிடம் மனு அளிக்கப்பட்டது. 

இதனால், இந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகினாா். அதைத் தொடா்ந்து வழக்கை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனை தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி நியமித்தாா். இந்த நிலையில், அதிமுகவின் பொதுக் குழு தொடா்பான வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராக உள்ளதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை ஆகஸ்ட் 10-க்கு ஒத்திவைத்தார் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT