தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையில் 13 மதகுகள் திறப்பு: தமிழக பொறியாளர்கள் ஆய்வு

9th Aug 2022 05:30 PM

ADVERTISEMENT

 

இடுக்கி அணைக்கு உபரி நீர் வெளியேற்றம் செய்ய முல்லைப் பெரியாறு அணையில் உள்ள, 13 மதகுகளும் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதை  தமிழக பொறியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

தற்போது பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் உயர்வைக் கட்டுப்படுத்த ரூல் கர்வ் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அணைக்குள் வரும் நீர், இடுக்கி அணைக்கு உபரி நீராக, ஆக.4 முதல் திறந்து விடப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி அணைக்கு உபரி நீர் வெளியேற 13 மதகுகள் உள்ளன, ஆக.4 முதல் ஒவ்வொரு மதகாக திறக்கப்பட்டது, செவ்வாய்க்கிழமை 13 மதகுகளும் 90 செ.மீ. உயரத்திற்குத்  திறக்கப்பட்டதால், உபரி நீர் விநாடிக்கு 9,677 கன அடியாகச் சென்றது.

ADVERTISEMENT

அணையில் உள்ள அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டதால், பெரியாறு வைகை பாசன பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அ.கிறிஸ்து கேச குமார் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேறுவது, பிரதான அணை, பேபி அணை, சரங்கம் மற்றும் காலரி பகுதிகள், அணையின் நீர் கசியும்,  சீப்பேஜ் வாட்டர் அளவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

ஆய்வின் போது பெரியாறு அணை சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் ஜெ.சாம்இர்வின், பெரியாறு வைகை பாசன உத்தமபாளையம் கோட்ட பொறியாளர் ந.அன்புசெல்வம், பெரியாறு அணை உதவி செயற்பொறியாளர் டி.குமார், மயில்வாகனண், உதவி பொறியாளர்கள் பி.ராஜகோபால், மாய கிருஷ்ணன், முரளிதரன், நவீன் குமார் கலந்து கொண்டனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT