தமிழ்நாடு

திருப்புவனம் அருகே மொஹரம் பண்டிகை கொண்டாடிய இந்துக்கள்: தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர்

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே  கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை  மொஹரம் பண்டிகையை கொண்டாடிய இந்து மக்கள் பள்ளிவாசல் முன்பு தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர். 

திருப்புவனம் அருகே முதுவந்திடல் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்து, முஸ்லிம் மக்கள் மத ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்துள்ளனர். காலப் போக்கில் கிராமத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேறிவிட்டதால் இந்து மக்கள் முஸ்லிம் மக்கள் கொண்டாடிய மொஹரம் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். 

இதற்காக கிராமத்தில் வாழும் இந்து மக்கள் மொஹரம் பண்டிகை அன்று தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்ற விரதம் தொடங்கினர். மொஹரத்தன்று காலை இங்குள்ள பள்ளிவாசல்  முன்பு இவர்கள் தீக்குண்டத்தில் பரப்பி வைக்கப்பட்டிருந்த நெருப்பு குண்டத்தில் ஆண்கள் வரிசையாக வந்து தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர். பெண்கள் தலையில் தீக்கங்குகளை கொட்டி பூ மொழுகுதல் செய்து வேண்டுதல் நிறைவேற்றினர். 

இவ்விழாவைக் காண முதுவந்திடல்  கிராமத்தில் இருந்து வெளியேறிய ஏராளமான முஸ்லிம் மக்களும் உள்ளூர் கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்களும் முதுவந்திடல் கிராமத்தில் திரண்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT