தமிழ்நாடு

சேலத்தில் ஆடித்திருவிழா: பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

9th Aug 2022 04:27 PM

ADVERTISEMENT

 

ஆண்டுதோறும் சேலத்தில் ஆடித் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கோட்டை ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் விழா துவங்கி சுற்றுவட்டாரத்தில் உள்ள 18 பட்டி மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் திருவிழா தொடங்கி சிறப்புப் பெற்று வருகிறது.

அதில் ஒரு பகுதியாக இன்று செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றன. செவ்வாபேட்டை மாரியம்மன் கோயிலில் வழிபட்டு வரும் பக்தர்கள் அலகு குத்தி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

படிக்க: இரட்டை இலையைத் தெரிவு செய்த மாயத் தேவர்!

ADVERTISEMENT

உடலில் கத்தி வாள் போன்ற கூர்மையான ஆயுதங்களை உடலில் குத்திக்கொண்டு ஜேசிபி வாகனங்களில் அந்தரத்தில் தொங்கியவாறு ஊர்வலமாகச் சென்று நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

பத்துக்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களில் பக்தர்கள் அந்தரத்தில் தொடங்கியபடி அலகு குத்திக்கொண்டு சென்ற காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. 

படிக்க: கோவை, நீலகிரியில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு

இதேபோன்று, கருங்கல்பட்டி புத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, திருக்கோயிலில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது, அம்மனுக்கு ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான ரொக்கப்பணத்தில் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. 

ஆடித்திருவிழாவையொட்டி சேலம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT