தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: 'டிரம்ஸ்' இசைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

9th Aug 2022 06:40 PM

ADVERTISEMENT


செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் டிரம்ஸ் இசைத்து மகிழ்ந்தார். 
 
''இந்தியாவின் இதயத் துடிப்பு'' என்ற பெயரில் டிரம்ஸ் கலைஞர் சிவமணி கச்சேரி நடத்தினார். இதில் செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலை இசைக்குழுவினர் இசைத்தபோது பார்வையாளர்கள் கோஷங்களை எழுப்பி மகிழ்ந்தனர்.

இதில், தண்ணீர் கேன்களை வைத்து மேளம் வாசித்தது பார்வையாளர்களை வெகுவாக கவந்தது.

இதனைத் தொடர்ந்து டிரம்ஸ் இசைத்தபடியே மேடையிலிருந்து வந்த இசைக்கலைஞர் சிவமணி, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சென்று வாசித்தார். 

அப்போது மு.க.ஸ்டாலினும் சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் இசைத்தார். அதனைத் தொடர்ந்து ஸ்பன் தேவசியும் டிரம்ஸ் இசைத்து மகிழ்ந்தார்.   

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT