தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: சிறந்த அணிகளுக்கு விருது

9th Aug 2022 08:09 PM

ADVERTISEMENT

 

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் சிறந்த அணிகளுக்கு விருது மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டன. 

44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில், கலைஞர்களின் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறந்த அணிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

சிறந்த சீருடை அணிந்த அணிக்கான விருது

ADVERTISEMENT

சிறந்த சீருடை அணிந்தத அணிகளுக்கு விருது வழங்கப்பட்டது. அங்கோலா, ஸ்விட்சர்லாந்து, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் இந்த விருதைப் பெற்றன. திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதய்நிதி ஸ்டாலின் அவர்களுக்கு விருது வழங்கினார்.

ஆண்களுக்கான சிறந்த சீருடை

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்களுக்கான சிறந்த சீருடை விருது மங்கோலியா, உஸ்பெகிஸ்தான் நாட்டின் அணிகள்ளுக்கு வழங்கப்பட்டன.

பெண்களுக்கான சிறந்த சீருடை

சிறந்த மகளிர் அணி சீருடைக்கான விருது உகாண்டா நாட்டு அணிக்கு அறிவிக்கப்பட்டது. 

ஸ்டைலிஷ் அணி

டென்மார்க் அணிக்கு சிறந்த ஸ்டைலிஷ் அணி விருது வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT