தமிழ்நாடு

அதிமுகவின் முதல் எம்.பி. மாயத் தேவர் காலமானார்

9th Aug 2022 02:26 PM

ADVERTISEMENT

திண்டுக்கல்: அதிமுகவிலிருந்து மக்களவை உறுப்பினராக முதல்முறையாக தேர்வு செய்யப்பட்ட மாயத்தேவர்(வயது 88) உடல்நலக் குறைவால் காலமானார்.

அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது, 1972-ஆம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத் தேர்தலில், முதல்முறையாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாயத்தேவர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | இரட்டை இலையைத் தெரிவு செய்த மாயத் தேவர்!

திண்டுக்கல் அடுத்துள்ள சின்னாளப்பட்டியில் மனைவி சரஸ்வதி மற்றும் மகன் செந்தில்குமார் என்ற வெற்றித் தமிழன் ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தனது 88ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை அவர் காலமானார்.

இறுதிச் சடங்குகள் சின்னாளப்பட்டியிலுள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை மாலை 4 மணி நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு - 9043160045.

ADVERTISEMENT
ADVERTISEMENT