தமிழ்நாடு

பரந்தூரில் ரூ.20,000 கோடியில் புதிய விமான நிலையம்!

9th Aug 2022 08:24 AM

ADVERTISEMENT

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையத்தின் நுழைவுப் பாதை அமைக்கப்படவுள்ளது.

பல்வகை போக்குவரத்து உட்கட்டமைப்பை உருவாக்கும் வாய்ப்பும் உள்ளது.

பரந்தூருக்கு கிழக்கே சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், வடக்கே அரக்கோணம், தெற்கே காஞ்சிபுரம் ஆகியவை 29 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ளன.

ஸ்ரீபெரும்புதூர், பரந்தூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படலாம். புதிய விமான நிலையத்துக்கான உரிமத்தைப் பெற 2 ஆண்டுகள் ஆகலாம்.

ADVERTISEMENT

புதிய விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகளை முடிக்க 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம். அதாவது, 2027-2028-இல் பயன்பாட்டுக்கு வரலாம்.

நிகழாண்டில் (2022) தொடங்கப்பட்டாலும், பசுமை விமான நிலையத்துக்கான அனைத்துப் பணிகளையும் முடிக்க சுமார்  7 ஆண்டுகள் வரை ஆகலாம்.

புதிய விமான நிலையத்துக்கான நிலமானது 4,500 ஏக்கர் வரை தேவைப்படுவதால், நிலத்தைக் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க வேண்டும்.

குடியிருப்புகளை மாற்ற வேண்டிய சூழல் உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பரந்தூர் கிராம மக்கள் தொகை 2,556 பேர். இதன் பரப்பளவு 1,328.11 ஹெக்டேர். 

சென்னை உள்பட பிற சர்வதேச விமான நிலையங்களுக்கும் பயனுள்ளதாக அமையும் வகையில் புதிய விமான நிலையம் இருக்கும்.

புதிய விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் இரு விமானங்கள் தரையிறங்கும் வகையில் இரு ஓடுபாதைகள் அமையவுள்ளன.

சென்னை சென்ட்ரலில் இருந்து 68.5 கி.மீ. தொலைவிலும், மீனம்பாக்கத்தில் இருந்து 59 கி.மீ. தொலைவிலும் பரந்தூர் உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT