தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் 72 பேருக்கு ஜாமீன்

9th Aug 2022 03:08 PM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி:  சின்ன சேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில் கைதான 72 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தது தொடா்பாக ஜூலை 17ஆம் தேதி நடந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக 300-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் 72 பேருக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: 'முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது' - கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

ADVERTISEMENT

இக்கலவரம் தொடர்பான 290 பேர் ஜாமீன் மனு நடைபெற்ற விசாரணையில் 50 பேரின் ஜாமீன் மனுவை நீதிபதி பூர்ணீமா  தள்ளுபடி செய்தார். மேலும், 174 பேரின் ஜாமீன் மனு நாளை(ஆகஸ்ட் 9) விசாரணைக்கு வர உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT