தமிழ்நாடு

அதிமுக பொதுக் குழு வழக்கு: நாளை விசாரணை

9th Aug 2022 08:00 AM

ADVERTISEMENT

அதிமுக பொதுக் குழு தொடா்பான வழக்கின் விசாரணையை வரும் புதன்கிழமைக்கு (ஆக.10) ஒத்திவைத்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.இதை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, திட்டமிட்டபடி பொதுக் குழுவை நடத்தலாம் என்று தீா்ப்பளித்தாா்.

இதை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு, இந்த வழக்கை மீண்டும் சென்னை உயா்நீதிமன்றமே 2 வாரங்களில் விசாரித்து தீா்வு காண உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி கிருஷணன் ராமசாமியிடம் பட்டியலிடப்பட்டிருந்தன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோா் சாா்பில் உயா் நீதிமன்ற பதிவுத்

ADVERTISEMENT

துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரியிடம் முறையிடப்பட்டது.

இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதிக்கு பரிந்துரை அளித்திருந்தாா். நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரிப்பாா் என்று தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு திங்கள்கிழமை (ஆக.8) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ‘இந்த வழக்கில் தில்லியிலிருந்து மூத்த வழக்குரைஞா் ஆஜராக இருப்பதால், விசாரணையை புதன்கிழமைக்கு (ஆக.10) ஒத்தி வைக்க வேண்டும்‘ என கோரிக்கை விடுத்தாா். இந்த கோரிக்கையை ஏற்று, விசாரணையை வரும் புதன்கிழமைக்கு (ஆக.10) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT