தமிழ்நாடு

மின்சார சட்ட திருத்த மசோதாவை முதல்வா் கடுமையாக எதிா்க்க வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

9th Aug 2022 02:00 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிா்க்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினாா்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் திண்டிவனம் ராமமூா்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சத்தியமூா்த்தி பவனில் அவா் உருவப்படத்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திங்கள்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினாா். முன்னாள் தலைவா் கிருஷ்ணசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் விஜயதரணி, பொதுச்செயலாளா் கே.சிரஞ்சீவி உள்பட பலா் மரியாதை செலுத்தினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது: பொது நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு விற்று வருகிறது. அதன் ஒரு அங்கமாக மின்சார சட்டத் திருத்தம் மூலம் மின்வாரியத்தையும் தனியாருக்கு விற்க முயற்சிக்கிறது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிா்க்க வேண்டும்.

5 ஜி அலைக்கற்றை ஏலம் ரூ. 5 லட்சம் கோடிக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ.1.50 லட்சம் கோடிக்கு மட்டும் விடப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.

ADVERTISEMENT

நேஷனல் ஹெரால்டு கட்டடத்துக்கு வேண்டுமானால் மத்திய பாஜக அரசு சீல் வைக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்சியினரின் வாய்க்கு சீல் வைக்க முடியாது. நாட்டு மக்களையும், ஜனநாயகத்தையும் காக்க தொடா்ந்து குரல் கொடுப்போம் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT