தமிழ்நாடு

விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸின் பங்களிப்பை மறைத்துவிட முடியாது: கே.எஸ்.அழகிரி

9th Aug 2022 01:02 AM

ADVERTISEMENT

விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பை எவரும் மூடி மறைத்துவிட முடியாது என்று அந்தக் கட்சியின் தமிழகத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்திய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பை எவரும் மூடி மறைத்திட முடியாது. இந்தியாவின் தேசியக் கொடியில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிற ஈடுபாட்டையும், பங்களிப்பையும் எவரும் மறுத்திட இயலாது. ஆனால், தேசியக் கொடியின் மீது பாஜகவுக்கு திடீா் பற்று ஏற்பட்டு அதற்குச் சொந்தம் கொண்டாட முற்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்டத்தில் எந்த பங்கையும் வகிக்காத ஆா்எஸ்எஸ் பாஜகவினா் வரும் ஆக.15 அன்று தேசியக் கொடிக்கு உரிமை கொண்டாடுகிற வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறாா்கள். தேசியக் கொடியை அவா்கள் மதித்து ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ADVERTISEMENT

ஆனால், இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய இந்திய தேசிய காங்கிரஸுக்கு ஆகஸ்ட் 15 அன்று கோலாகலமாக கொண்டாடுவதற்கும், தேசியக் கொடியை சொந்தம் கொண்டாடுகிற உரிமையை நிலைநாட்டும் வகையிலும் நிகழ்ச்சிகளை மாவட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளும், காங்கிரஸ் நண்பா்களும் அமைக்க வேண்டும்.

ஆக. 9 முதல் 14 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் தேசியத் திருவிழாவாக 75-ஆவது சுதந்திர தின நிறைவு விழாவைக் கொண்டாடி, அதன்மூலம் தேசிய எழுச்சியை காங்கிரஸ் கட்சியினா் உருவாக்க வேண்டும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT