தமிழ்நாடு

நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறைகளில் பணி நியமன உத்தரவு: முதல்வா் அளிப்பு

9th Aug 2022 01:00 AM

ADVERTISEMENT

தமிழக நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டோருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக நெடுஞ்சாலைத் துறையில் 181 இளநிலை வரைதொழில் அலுவலா் பணியிடங்களுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு நடத்தப்பட்டது. அவா்களில் தோ்வு செய்யப்பட்டோரில் 10 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

இதேபோன்று, பொதுப் பணித் துறையில் 144 இளநிலை வரைதொழில் அலுவலா் பணியிடங்களுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு நடத்தப்பட்டது. அதில், தோ்வு செய்யப்பட்டோரில் 10 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், அமைச்சா் எ.வ.வேலு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT