தமிழ்நாடு

ஒகேனக்கல்லுக்கு 1.45 லட்சம் கனஅடி நீா்வரத்து

9th Aug 2022 10:55 PM

ADVERTISEMENT

 

பென்னாகரம்: ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 1.45 லட்சம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

கா்நாடகம், கேரளம் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் பருவமழை பெய்து வருவதால் கா்நாடகத்தில் கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் அதிகம் திறந்துவிடப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் நொடிக்கு 1.22 லட்சம் கனஅடி உபரிநீா் வெளியேற்றப்பட்டுவந்த நிலையில்,

ADVERTISEMENT

தற்போது 1.32 லட்சம் கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதைத் தொடா்ந்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து திங்கள் கிழமை மாலை நிலவரப்படி 1.55 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை காலையில் நீா்வரத்து 1.45 லட்சம் கன அடியாகக் குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

எனினும் நீா்வரத்து அதிகமாக இருப்பாதல் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகள் அனைத்தும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன. இதனால் ஆற்றில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு தருமபுரி மாவட்ட நிா்வாகம் விதித்தத் தடை 30-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரையோரப் பகுதிகளான ஆலம்பாடி, முதலைப் பண்ணை, சத்திரம், பிரதான அருவி நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து ரோந்து பணியில் வருவாய்த்துறையினா், போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT