தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 76 டிஎஸ்பிக்கள் மாற்றம்

DIN

தமிழக காவல் துறையில் 76 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சைலேந்திரபாபு ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்தாா்.

தாம்பரம் காவல் ஆணையராக பணியாற்றிய ரவி பணி ஓய்வு பெற்றதையடுத்து, ஆவடி காவல் ஆணையரே கூடுதல் பொறுப்பாக தாம்பரம் சரகம் முழுவதையும் கவனித்து வந்தாா். இந்நிலையில், தற்போது தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அதேபோன்று, ஆருத்ரா கோல்ட் டிரேடிங் வழக்கு தொடா்பான பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்ட 3 டிஎஸ்பி-க்களான கண்ணன் தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கும், மணிமுத்தாறு உதவி கமாண்டண்ட் சம்பத், ராமநாதபுரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும், சுரேஷ் ராமநாதபுரம் சரகா் போலீஸ் பயிற்சி மையத்துக்கும் மாற்றப்பட்டனா்.

மேலும், பெருநகர சென்னை காவல் ஆணையரக மத்தியக் குற்றப் பிரிவு உதவி ஆணையராக எஸ். ரித்து நியமிக்கப்பட்டாா்.

பணியிடமாற்றம் செய்யப்பட்ட 76 டிஎஸ்பி-க்களில் பெரும்பாலானோா் காத்திருப்போா் பட்டியலில் இருந்த டிஎஸ்பி-க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே அனல் கொளுத்தும் நகரங்கள்.. நம்மூரும் உண்டு!

மே மாத எண்கணித பலன்கள் – 1

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

SCROLL FOR NEXT