தமிழ்நாடு

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு யாரையெல்லாம் தேர்வு செய்யக்கூடாது? - புதிய நடைமுறைகள் வெளியீடு

8th Aug 2022 04:39 PM

ADVERTISEMENT

 

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தனிப்பயிற்சி (டியூசன்) எடுக்கும் ஆசிரியர்களின் பெயர்களை பரிந்துரைக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள புதிய நடைமுறைகளுக்கான பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்ட அறிவிப்பில், 

- 38 மாவட்டங்களைச் சேர்ந்த 386 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT

- விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர்(சிஇஓ) தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.

- 38 மாவட்ட குழுக்கள் தரும் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தலைமையிலான மாநில அளவிலான குழு ஆய்வு செய்ய வேண்டும். 

- எவ்வித புகாருக்கும் இடம் தராமல் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிருக்க வேண்டும்.

இதையும் படிக்க | டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு... வனத்தொழில் பழகுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

- ஏற்கனவே விருது பெற்றவர்களை மீண்டும் தேர்வு செய்யக் கூடாது. 

- தனிப்பயிற்சி (டியூசன்) எடுக்கும் ஆசிரியர்கள், அரசியல் தொடர்புள்ள ஆசிரியர்களின் பெயர்களை பரிந்துரைக்கக் கூடாது என்று அந்த வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT