தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,40,000 கன அடியாக அதிகரிப்பு

8th Aug 2022 08:45 AM

ADVERTISEMENT

மேட்டூர்: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை துவங்கியதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  1,40,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து வினாடிக்கு 1,40,000 கனஅடி வீதம் வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது. அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் ,உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 1,17,000 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. 

இதையும் படிக்க: அதிமுக பொதுக் குழு வழக்கு: இன்று விசாரணை

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120.06 அடியாகவும், நீர் இருப்பு 93.66 டி.எம்.சியாகவும் இருந்தது. அணையில் இருந்து கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT